May 13, 2012

Start Music...

வணக்கம் .

ஆபீஸ் நண்பர்கள் வட்டத்துக்கு, நேரம் கிடைக்கும்போது  ஆங்கிலத்தில் எதையாவது எழுதுவேன்...என் நல்ல நண்பர்கள் ,என்னையும் ,என் ஆங்கிலத்தையும் சகித்துக்கொண்டு , என் e-mail களை படித்து (உடனே delete செய்தாலும்) , என்னை எழுத சொல்லி ஊக்கமளித்தனர்..

ஆங்கிலத்தை அவ்வப்போது ,சில பல கொடுமைகள் செய்துகொண்டிருந்த நான், திடீரென்று ஒரு நாள் google transliterator மூலம் தமிழில் எழுத ஆரம்பித்தேன்.

இதோ , தமிழுக்கு வந்த புதிய தலைவலி..

தமிழில் எழுதி பல வருடங்களாயிற்று . எழுத ,சற்று கஷ்டமாகவே உள்ளது .

படிக்க???

அது உங்கள் பாடு !

May 12, 2012

என் Facebook அனுபவங்கள்


இந்த நாள் இனிய நாள் .

Facebook -இல் மொத்தம் எத்தனை பக்கம் இருக்கும்? சமீப காலமாக நண்பர்கள் அனைவரும் இதைப்பற்றி பேசும்போது , நான் மட்டும் "நிலக்கரி ஊழல்"   செய்தி கேட்டவன்    மாதிரி ஆச்சர்யபட்டிருக்கிறேன். நண்பர்களிடம் விசாரித்ததில், இது ஒரு social networking அமைப்பு என்று தெரியவந்தது. நான் ஒன்றும் anti-social element அல்லவே.  எனவே , நான் ஏன் என் அழகிய face 'ஐ அங்கே காட்டக்கூடாது?

அய்யா..இதோ வருகிறேன்.

ஏதோ ஒரு முனைப்போடு , இன்று facebook உள்ளே போய், log in செய்ய முயற்சித்தேன் .

அடேங்கப்பா !!!

இது பல விஷயங்களை கேட்கிறதே?

ஊர் ,பெயர் ,மனிதனா,மிருகமா,வேற்று கிரகமா, வேலை செய்பவனா, வெட்டியானா , படித்தவனா, பாட்டு பிடிக்குமா ,பைத்தியம் பிடிக்குமா,பிறந்த நாள், (நட்சத்ரம்/கோத்ரம் இல்லை...அப்பாடி!),பிடித்த படம், படித்த புத்தகம் etc etc …ஆத்தாடி !

ஒரு வழியாக என் சகல மச்சங்களையும் உலகுக்கு அறிவித்து , ஒரு அக்கௌன்ட் ஓபன் செய்தாயிற்று.

உள்ளே போனால்….. ஒரே ஒரு குழப்பம்.

 என்ன செய்வது ?


வலது பக்கம் 'people you may know ' என்று பல புகைப்படங்கள் தோன்றின..அதில் யாரையும் எனக்கு தெரிந்திருக்கவில்லை.ஆனாலும்..பாயல்,ஷ்ரியா,ப்ரியா என்று சற்றே ஆறுதல் அளிக்கும் புகைப்படங்கள் ஆங்கே தோன்றின. நன்று.

நல்லவேளை, என் போட்டோ-வை நான் upload செய்யவில்லை. செய்திருந்தால், அதுவே , பல நண்பர்/நண்பிகளை இழக்க காரணமாகி இருக்கும். என் colour போட்டோவே Black & White மாதிரி இருக்கும் என்று என் மனைவி அடிக்கும் ஜோக், இப்போது ஞாபகம் வந்தது !

ஓகே. இப்போது நண்பர்களை சேர்ப்பது எப்படி?

நல்ல வேளையாக companyமூலமாக சில நண்பர்களை கண்டுபிடித்தேன் . அவர்களை ஆர்வத்துடன் add 'இனேன் .

பின்னர் Facebook , “உன் e-mail ID -ஐ கொடு ..நான் நண்பர்களை தருகிறேன் என்றது . தந்தேன்.

அட! நண்பர்கள் உடனே , இறக்குமதி செய்யப்பட்டார்கள்...மீண்டும் add ' இனேன் !

மற்றொரு குழப்பம் .....அவன் இவனுக்கு friend ..இவன் அவனுக்கு friend என்று ஏகப்பட்ட தகவல்கள்...நண்பர்களின் நண்பர்கள் பரிந்துரை செய்யப்பட்டார்கள் .இது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை.

பார்க்காமலே நண்பனா ? என் அண்ணனுக்கு நக்கீரன் கோபாலை தெரியும்..நக்கீரன் கோபாலுக்கு சந்தன கடத்தல் வீரப்பனை தெரியும் ..நானும் வீரப்பனும் Friends?

ஓகே. ஒரு வழியாக,  Friend Requests  அனுப்பியாயிற்று !அடுத்தென்ன? தெரிந்த முகங்கலயெல்லாம் காடு, மலை தாண்டி , chakra gold tea விளம்பரம் போல தேடினேன்......

எவ்வளவு நேரம் நண்பர்களை தேட வேண்டும்?  ஒரு தடவை நண்பர்களை தேடி ,நாடு தழுவிய சூறாவளி சுற்றுபயணம் மேற்க்கொள்ளலமா ?

ம்ம்ம்.. பொறுமையில்லை.LOG OFF .

அட ! அரை மணி நேரம் பொழுது போனதே தெரியவில்லை...

மறு நாள் இரவு ஆபீஸ்-இலிருந்து வீட்டுக்கு போனதும் , லேப்டாப்-ஐ எடுத்தேன் ...ஒரு சின்ன குறுகுறுப்பு ....facebook -இல் என்ன வந்திருக்கும்? துடிப்பாக, உடனேlog in’ செய்தேன் .

பல இன்ப அதிர்ச்சிகள் ...

“HARIKESH has confirmed that you're friends” .

அட! 15 வருட நண்பர் இன்றுதான் CONFIRMED நண்பரா? ! சந்தோசம் சார் !

"நல்ல நண்பன் இல்லையென்றால்"...  என்ற 'நண்பன்' பட பாட்டு என் காதில் ஒலிக்கசற்றே சந்தோஷப்பட்டாலும்,மற்றும் பல நெருங்கிய நண்பர்கள் இன்னும் என்னை confirm செய்யாதது மிகுந்த வருத்தம் அளித்தது !  ஓகே.  ஆனால், என் ஒரே பயம்… enemy 'ஆக confirm செய்ய எதாவது option உள்ளதா?? யாராவது விசாரித்து சொல்லுங்கள் please.

சற்று நேரம் கழித்து , பல mail கள் வந்து என் inbox -ஐ நிரப்பின..என் அருமை நண்பன் add செய்யும் ஒவ்வொரு போட்டோவுக்கும் facebook எனக்கு ஈமெயில் அனுப்பியது. மீண்டும் என் காதில் ரீங்காரம்...

 "நல்ல நண்பன் இல்லையென்றால்"...

ஒவ்வொரு போட்டோ வாக பார்க்க ஆரம்பித்தேன் ...

இதற்கிடையில், மற்றுமொரு நண்பர் தன் blog link அனுப்பியிருந்தார் ... அது ஹிந்து கோயில் குளம் சம்பந்தமான blog ! இதை, என் போன்ற ஒரு அயோக்யனுக்கு அனுப்பியதை ஒரு பெருமையான விஷயமாக நினைக்கிறேன் .

மற்றுமொரு வீடியோ லிங்க்...

 your friend divakar liked your activity ! எந்த ACTIVITY ? எனக்கு இப்போதே தெரிந்தாக வேண்டும் !

என் interest -இல் tamil comedy இருந்ததால், பல தரப்பட்ட காமெடி துணுக்குகள் வந்து விழுந்தன. பல joke 'கள் சற்றே அழ வைத்தாலும் ,சில நல்ல ஜோக்'களும் இருந்தன.

Facebook-ல் நிறைய விஷயங்கள் எனக்கு முற்றிலும் புதிது !

இன்னும் என்னென்ன பார்க்கலாம் என்று நான் யோசித்துகொண்டிருக்கும்போது...மீண்டும் அந்த ரீங்காரம் ...இம்முறை, "நல்ல நண்பன் .." இனிய பாடல் கேட்கவில்லை. L.R .Easwari குரலில் யாரோ என்னை திட்டுவதை நான் திடீரென்று உணர்ந்தேன். என் அன்பு மனைவியின் அதே வெண்கல குரல் ! ஆனால் , இது வேற பாட்டு !

 செல்லாத்தா ..என் மாரியாத்தா" அம்மன் பாட்டு தொடர்ச்சியாக அர்ச்சனை ...

"கொழந்தை தனியா இருக்கா..வாசக்கதவ பூட்டல ...கொசு வல போடல ..என்னதான் லேப்டாப்-ல நோண்டிண்டு இருக்க்கேளோ தெரியல " அதன் பின் அவள் வழக்கம்போல், அடுத்த பல்லவியை ஆரம்பிக்க

கடிகாரத்தை பார்த்தால்….மணி பத்து !

அடேங்கப்பா ! சொளயாக  2 மணி நேரம் வெறும் மொக்கை போட்டிருக்கிறேன்..

இன்று என் மகளுக்கு கதை சொல்லவில்லை .என் அப்பாவுடன் /அம்மாவுடன் தினமும் செலவிடும் அரை மணி நேரம் out !! மனைவியுடனும் ஒரு வார்த்தை பேசவில்லை.

அடடா... இந்த facebook நம்மை மிகவும் ஆக்கிமித்துவிட்டதோ ??

நமக்கு நண்பர்கள் வேண்டும் ...ஆனால் , இது இனிமேல் வேண்டவே வேண்டாம் ...என்று முடிவு செய்து , logoff செய்தேன் ! இனி ,பார்க்கமாட்டேன் . உறுதி. "லாக் கியா ஜாய் " என்று மனைவியிடம் சத்தியம் செய்தேன்.

பின்னர் ,இரவு படுத்து ,என் மகளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது , என் பாழாய்ப்போன android mobile , எனக்கு notifi யது, " your friend has added a new photo " .

என்ன photo வாக இருக்கும் ???

Click !

L.R.Easwari  மீண்டும் பாடினாள்.